திங்கள், 17 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 ஜூலை 2025 (13:18 IST)

சென்னையில் அதிகரிக்கும் டெங்கு: புள்ளிவிவரங்கள் எச்சரிக்கை!

சென்னையில் அதிகரிக்கும் டெங்கு: புள்ளிவிவரங்கள் எச்சரிக்கை!
சென்னை முழுவதும் டெங்கு பரவி வருவதாகவும், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
 
சென்னையில் அடையாறு மண்டலத்தில் அதிகபட்சமாக 110 பேருக்கும், சோளிங்கநல்லூரில் 60 பேருக்கும் டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
டெங்கு கொசுக்கள் சுத்தமான நீரில்தான் இனப்பெருக்கம் செய்யும். எனவே, குடிநீர் தொட்டிகள் மூடப்பட்டுள்ளதா, வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் இருக்கிறதா என்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்று மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. 
 
டெங்கு காய்ச்சல் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்-அக்டோபரில் அதிகரித்து, செப்டம்பர்-அக்டோபரில் உச்சம் பெறும். எனவே, டெங்கு சூடுபிடிக்கும் மாதங்கள் வரவிருப்பதால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், கொசு உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran