ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2024 (21:00 IST)

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்ய கோரிக்கை

Salem farmers
ஜாதி பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் கண்ணையன், கிருஷ்ணன் ஆகியோர் சேலம் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள ராமநாயக்கன் பாளையம் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளான கிருஷ்ணன், கண்ணையன் ஆகியோருக்கு அவர்களின் சாதிப்பெயரைச் சொல்லி அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஜாதி பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் கண்ணையன், கிருஷ்ணன் ஆகியோர் சேலம் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அவர்களின் நிலத்தை அபரிக்க முயன்ற விவகாரத்தில் பாஜக நிர்வாகி குணசேகரன் மீது நடவடிக்கை எடுக்க மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் விவசாயிகளுக்கு சாதி பெயருடன் சம்மன் அனுப்பிய விவகாரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை  பதவி நீக்கம் செய்ய கோரிக்கை விடுத்து, சென்னையைச் சேர்ந்த ஐ.ஆர்.எஸ் அதிகாரியும், ஜிஎஸ்டி துணை ஆணையருமான பாலமுருகன் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.