திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 29 செப்டம்பர் 2022 (10:40 IST)

சிலிண்டர் விபத்து: 7 பேருக்கு நிதி வழங்க நடவடிக்கை?

சிலிண்டர் விபத்தில் படுகாயமடைந்த 7 பேருக்கு நிதி வழங்க நடவடிக்கை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சிலிண்டர் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த குடோனில் திடீரென தீப்பற்றியுள்ளது. இதனால் அங்கிருந்த சிலிண்டர்கள் வெடித்ததால் தீ அக்கம்பக்கம் இருந்த வீடுகளுக்கும் பரவியுள்ளது.

உடனடியாக சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரவு நேரத்தில் திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தீ விபத்தில் 8 பேர் காயம் அடைந்தனர். தீக்காயம் அடைந்த 8 பேரில் 5 பேர் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் இருப்பவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார்.

இந்நிலையில் சிலிண்டர் விபத்தில் படுகாயமடைந்த 7 பேருக்கு நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் காவல்துறை விசாரணைக்குப் பின் இச்சம்பவம் தோடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.