ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2024 (07:53 IST)

மக்களவை தேர்தல்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

gk vasan
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த கட்சிக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கி உள்ளது.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன என்பது தெரிந்தது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியை தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுக்கும் அவர்கள் கேட்ட சின்னம் கிடைத்துவிட்ட நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அவர்கள் கேட்ட சைக்கிள் சின்னம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இது குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தங்கள் கட்சிக்கு சைக்கிள் சின்னம் கிடைத்ததை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட உள்ளது என்பதும் மூன்று தொகுதிகளில் அக்கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva