ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 15 ஜூன் 2016 (09:29 IST)

மாணவர்களுக்கு சூடு வைத்த ஆசிரியருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு!

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி அரசு பள்ளியில் 4-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு காலில் சூடத்தால் சூடு வைத்ததால் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


 
 
அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருபவர் வைஜெயந்தி மாலா. இவர் 4-ஆம் வகுப்பில் படிக்கும் சில மாணவர்கள் சரியாக படிக்காததால் அவர்களுடைய காலில் கற்பூரத்தால் சூடு வைத்துள்ளார். இதனால் மாணவர்களின் காலில் தீ காயம் ஏற்பட்டது.
 
வீட்டிற்கு சென்ற மாணவர்களின் காலை பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து, மாணவர்களின் காலில் சூடு வைத்த ஆசிரியரையும், பள்ளியயும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விசாரணை நடத்தி ஆசிரியர் வைஜெயந்தி மாலா மீது தவறு இருப்பது தெரிந்ததும் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
 
இதனையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர் வைஜெயந்தி மாலா சிறுவனை கொடுமைப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டர். இந்நிலையில் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஆசிரியரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றம்.