வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (18:31 IST)

தமிழகத்தில் இன்று 31 பேருக்கு கொரொனா : மொத்தம் 1204 பேர் பாதிப்பு - பீலா ராஜேஷ்

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.  இந்நிலையில் உலக அளவில் இதுவரை, 19, 20,918 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,453289 பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 119686 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாலில் , இதுவரை 10,363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1036 பேர் குணமடைந்துள்ள நிலையில், 339 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் 1,211 பேர் கொரோனாவால் பாதிப்பு; ஒரே நாளில் 117 பேர் குணமடைந்துள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்   தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழக  சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.

அதில், தமிழகத்தில் இன்று மேலும் 31 பேருக்கு கொரொனா தொற்றூ ஏற்பட்டுள்ளதாகவும்  , தமிழகத்தில் மொத்தம் 1204 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 81 பேர் குணமடைந்துள்ளதாகவும், இன்று மட்டும் 6509 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் தொடர்ச்சியாக அவரிடம்  கேள்வி எழுப்பினர்., அதற்கு அனைவரும் அரசுடன் இணைந்து செயலாற்றும் போது குறைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழகத்தில், வீட்டுக் கண்காணிப்பில் 28711 பேரும், அரசுக்கண்காணிப்பில் 135 பேரும், 26 நாட்கள் நிறைவு பெற்றவர்கள் 68519 பேரும், இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்கள் 19255 பேர் என தெரிவித்துள்ளார்.

ஒருவருக்கு பரிசோதனை செய்து முடிவு தெரிய 6 மணிநேரம் அதிகமாவதால், அதற்காக கூடுதல் பணியாளர்களை ஆவ்ய்வகங்கலை அதிகரித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.