தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? நாளை சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மக்களிடம் பல ஆண்டுகளாக அறிமுகமாகியிருந்த இரட்டை இலையையும், உதயசூரியனையும் புதியதாக வந்த குக்கர் வீழ்த்தியது. குறிப்பாக உதயசூரியனுக்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை. எனவே தனக்கு முதல் வெற்றியை பெற்றுத்தந்த குக்கரை நிரந்தர சின்னமாக்க அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்
இந்த வழக்கின் விசாரணையின்போது 'குக்கர்' சின்னத்தை பதிவு செய்யப்படாத ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்குவது குறித்து உறுதி செய்ய முடியாது என்றும், சின்னம் ஒதுக்கும் நேரத்தில் தான் முடிவு செய்ய முடியும் என்றும் தேர்தல் ஆணையத்தின் சார்ப்பில் வாதாடப்பட்டது.
இந்த நிலையில் தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. தினகரனுக்கு குக்கர் கிடைக்குமா? கிடைக்காதா? என்பது நாளை முடிவு தெரிந்துவிடும். ஒருவேளை குக்கர் சின்னம் கிடைக்காவிட்டாலும் கிடைக்கும் சின்னத்தை குறுகிய காலத்தில் மக்களிடம் கொண்டு செல்வோம் என தினகரன் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.