சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை!

sathiyamoorthi
சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை!
siva| Last Updated: புதன், 24 பிப்ரவரி 2021 (21:52 IST)
சற்று முன்னர் சென்னை காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் பிரமுகர்கள் கூடி முக்கிய ஆலோசனை செய்து உள்ளனர்

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவியிருப்பதை அடுத்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தொகுதி உடன்பாடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களான உம்மன் சாண்டி மற்றும் குண்டு ராவ் ஆகியோர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் பற்றிய முக்கிய ஆலோசனையில் கார்த்திக் சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சீட் எதிர்பார்க்கும் முக்கிய பிரமுகர்கள் கூடியதாகவும் கூறப்படுகிறது. மேலும் திமுகவுடன் பேச்சு நடத்திய பிறகு நாளை மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்


இதில் மேலும் படிக்கவும் :