திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 30 ஆகஸ்ட் 2023 (13:48 IST)

பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை.. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி வாழ்த்து..!

செஸ் உலக கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் தோற்றாலும் வெள்ளி வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்த பிரக்ஞானந்தாவுக்கு  வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் இன்று அவர் சென்னை திரும்பினார். 
 
தமிழக அரசின் சார்பில் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியவர்களை சந்தித்தார். 
 
முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ரூபாய் 30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். 
 
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பிரக்ஞானந்தாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். செஸ் உலகக்கோப்பை தொடரில் வெள்ளி வென்று சென்னை திரும்பிய பிரக்யானந்தாவுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran