அதிமுகவினரிடம் ஜெயலலிதா நேர்காணல்

அதிமுகவினரிடம் ஜெயலலிதா நேர்காணல்


K.N.Vadivel| Last Modified திங்கள், 21 மார்ச் 2016 (23:03 IST)
சட்ட சபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய, முதல்வர் ஜெயலலிதா இன்று நேர்காணல் நடத்தினார்.
 
 
தமிழக சட்டசபை தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து, வேட்பாளர்களை தேர்வு செய்ய அனைத்து கட்சிகளும் தீவிரமாக உள்ளனர். அதிமுக சார்பில் முதல்வர்  ஜெயலலிதா முதற்கட்டமாக அக்கட்சி நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்தினார்.
 
அஇன்படி, இன்று காலையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. விருப்ப மனு கொடுத்தவர்களில் தொகுதிக்கு இருவரை தேர்வு செய்து நேர்காணல் நடைபெற்றது.
 
கன்னியாகுமரிக்கு சிவசெல்வராஜன், நாகர்கோவிலுக்கு தாம்சன், குளச்சல் சேவியர், பத்மநாபுரம் செங்கின், கிள்ளியூர் - கமலாபாய், விலவங்கோடு - மேரி டயானா, ராதாபுரம் - பால்ராஜ், திருநெல்வேலி - நைனார் நாகேந்திரன், பாளையங்கோட்டை - ஹசன் ஜாபர் அலி உள்ளிட்டோர் நேர் காணலில் கலந்து கொண்டதாக தெரிய வருகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :