தண்ணீர் லாரி ஸ்டிரைக்: முதலமைச்சர் அவசர ஆலோசனை
தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்பொழுது அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
உயர்நீதிமன்றம் அளித்த வரைமுறையின்றி நிலத்தடி நீரை எடுக்கக்கூடாது என்ற தீர்ப்புக்கு எதிராக டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் மற்றும் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் இரண்டாவது நாளாக இன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பல ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு விரைவில் தண்ணீர் கிடைக்க வழி செய்ய வேண்டும் என பொதுமக்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தண்ணீர் லாரியின் வேலை நிறுத்தம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்பொழுது அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.