வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (08:42 IST)

விஜய்யின் தாராள மனதை பாராட்டிய முதலமைச்சர் - வைரலாகும் வீடியோ இதோ!

நாடு முழுவதும் கொரோனா வைரஸால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு அரசியல் மற்றும் திரை பிரபலங்களும் நிதியுதவி செய்து வருகின்றனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் நடிகர் விஜய் ரூ 1.3 கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார். அதை அவர் தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்து கொடுத்துள்ளார். மத்திய அரசுக்கு 25 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம், FEFSI சங்கத்திற்கு 25 லட்சம் , கேரளாவுக்கு 10 லட்சம், கர்நாடகாவிற்கு 5 லட்சம், ஆந்திராவிற்கு 5 லட்சம், தெலுங்கானாவிற்கு 5 லட்சம் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் ரூபாய் என் பாதிக்கப்பட்ட அணைந்து மாநிலம், திரைத்துறையினருக்கு சராசரியாக வழங்கி பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார். அதுமட்டுமின்றி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவ வேண்டி தன்னுடைய ரசிகர் மன்றங்களுக்கும் நடிகர் விஜய் அவர்கள் நிதியுதவி வழங்கியுள்ளார்.

நடிகர் விஜய்யின் இந்த செயலுக்கு பல தரப்புகளிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வந்த நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விஜய்க்கு நன்றி தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்து. இந்நிலையில் தற்போது முதல்வர் அவர்கள்,  விஜய்யின் தாராள மனதை பாராட்டி நன்றி தெரிவித்த வீடியோ இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வைரலாகியுள்ளது. இதோ அந்த வீடியோ!..