திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 27 நவம்பர் 2019 (09:38 IST)

பஜ்ஜி சரியில்லை என்று கூறியவருக்கு கத்திக்குத்து: சென்னையில் பரபரப்பு!

சென்னையில் பஜ்ஜி சரியில்லை என்று கூறிய வாடிக்கையாளர் ஒருவரை பஜ்ஜி கடையில் வேலை பார்க்கும் ஊழியர் கத்தியால் குத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சென்னையை சேர்ந்த ஞானமணி என்பவர் செளகார்பேட்டியில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் அருகில் உள்ள பஜ்ஜி கடையின் நீண்ட நாள் வாடிக்கையாளர் ஆவார். 
 
இந்த நிலையில் வழக்கமான ருசியில் பஜ்ஜி இல்லை என்று ஞானமணி கடைக்காரரிடம் புகார் கூறியுள்ளார். இதனால் கடையில் வேலை செய்யும் வடமாநில இளைஞர் அருண் என்பவருக்கும் ஞாணமணிக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றியதால் அருண் தன் கையில் வைத்திருந்த வெங்காயம் வெட்டும் கத்தியால் ஞானமணியை குத்தினார்.
 
இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஞானமணியை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பஜ்ஜி கடையில் வேலை பார்க்கும் அருணை காவல் நிலையம் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது