கொங்கு நாட்டு சிங்கமே.. நாளைய முதல்வரே! – பாஜக அண்ணாமலைக்கு போஸ்டர்!

Annamalai
Prasanth Karthick| Last Modified புதன், 14 ஜூலை 2021 (12:02 IST)
தமிழக பாஜக புதிய தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுள்ள நிலையில் அவருக்கு ஒட்டப்பட்ட போஸ்டர் வைரலாகியுள்ளது.

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பதவி வகித்து வந்த நிலையில் சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் எல்.முருகனுக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து எல்.முருகன் விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. வட சென்னை பாஜக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் ”இன்றைய தலைவரே.. நாளைய முதல்வரே.. கொங்கு நாடு சிங்கமே” என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.இதில் மேலும் படிக்கவும் :