வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 20 மார்ச் 2024 (15:58 IST)

இயல்பை விட வெயில் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

கோடை காலம் தொடங்கி கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட அதிக வெப்பம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மார்ச் 20, 21 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்தாலும் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் மார்ச் 22, 23 ஆகிய தேதிகளில் லேசான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது

மேலும் இன்றும் நாளையும் தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலையாக 39 டிகிரி வரை பதிவாகும் என்றும் இயல்பை விட இரண்டு அல்லது மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னையில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் இருக்க கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இயல்பை விட அதிகமாக வெப்பம் இருக்கும் என்பதால் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் 11 மணி முதல் 3 மணி வரை அத்தியாவசிய தேவை இருந்தால் தவிர வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran