கமல்ஹாசன் உள்ளிட்ட 138 பேருக்கு நோட்டீஸ் - நீதிமன்றம் அதிரடி

Last Modified செவ்வாய், 6 மார்ச் 2018 (15:48 IST)
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விதிமுறைகளை மீறி சொகுசு பங்களா கட்டியுள்ளதாக எழுந்த புகாரில் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட 138 பேருக்கு நோட்டிஸ் அனுப்ப சி.எம்.டி.ஏ-விற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சி.எம்.டி.ஏ எனப்படும் பெருநகர் வளர்சிக்குழுமத்தின் அனுமதி இல்லாமல் நடிகர் கமல்ஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட சில சினிமா பிரபலங்கள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்,  காவல்துறை அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் சொகுசு பங்களாக்களை கட்டியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அங்கு வீடு கட்டியுள்ள அனைவுக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கும்படியும், அப்படி விளக்கம் அளிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணையை வருகிற ஏப்.9ம் தேதிக்கு ஒத்தி வைத்தி தீர்ப்பளித்துள்ளது.
 
அரசியலில் களம் இறங்கியுள்ள கமல்ஹாசன், இந்த விவகாரத்தில் சிக்கியிருப்பது அவரின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :