ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (14:11 IST)

சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ரூ.10,000.. மாநகராட்சியில் தீர்மானம்..!

Chennai Corporation
சென்னையில் உள்ள சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு அபராத தொகையை 10,000 வரை உயர்த்தும் தீர்மானம் சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் அபராத தொகையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள்து.
 
மாடு முதல்முறையாக பிடிக்கப்பட்டால் ரூ.5,000 அபராதம், மீண்டும் பிடிக்கப்பட்டால் ரூ.10,000 அபராதமாக வசூலிக்கப்படவுள்ளதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran