சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் திடீர் ரத்து.. பயணிகள் தவிப்பு..!
சென்னை சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் மின்சார ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த ரயில் சேவை ரத்து செய்யப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. இது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோரால் தினமும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், சென்னை சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிக்னல் சீரமைப்பு பணி காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை 9:15 முதல் மாலை 3:15 வரை ரயில்கள் இயங்காது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில், பொன்னேரி, எண்ணூர் வரை அதிகமான சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சிறப்பு ரயில்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. சிக்னல் சீரமைப்பு பணி முடிந்தவுடன் வழக்கம் போல் சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி ரயில் சேவை மீண்டும் இயக்கப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.
Edited by Siva