திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 21 ஜனவரி 2023 (08:36 IST)

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

இன்று அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.


சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை முடிந்துவிட்டது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

அதன்படி டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டது. நேற்று காலை சென்னை மேகமூட்டமாக காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.