திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2024 (14:20 IST)

தமிழ்நாட்டிற்கு 2.5 மடங்கு கூடுதல் நிதி கொடுத்துள்ளோம்: பிரதமர் மோடி

MK Stalin PM Modi
தமிழ்நாட்டிற்கு போதுமான நிதி மத்திய அரசு வழங்கவில்லை என தமிழக அரசின் சார்பில் குற்றச்சாட்டு எழுந்து உள்ள நிலையில் முந்தைய காலங்களை விட தமிழ்நாட்டிற்கு இரண்டரை மடங்கு அதிகமாக நிதி கொடுத்து உள்ளோம் என்று இன்று திருச்சியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி கூறியுள்ளார். 
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசிய போது  தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 
 
அதன் பின்னர் பிரதமர் மோடி பேசியபோது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வரலாறு காணாத நிதியை மத்திய அரசு செலவு செய்துள்ளது என்று கூறினார். 2014 ஆம் ஆண்டுக்கு முந்தைய 10 ஆண்டுகளில் மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு எவ்வளவு நிதி பெற்றதோ அதைவிட இரண்டரை மடங்கு அதிகமாக கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
 
Edited by Mahendran