1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 14 டிசம்பர் 2017 (15:52 IST)

ஓகி புயலால் எத்தனை பேர் மாயம்? மீனவ அமைப்பினரின் அதிர்ச்சிப் பட்டியல்

ஒகி புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை தெரிந்துகொள்ள, மீனவ அமைப்பினர் மற்றும் ஆலய நிர்வாகத்தினரின் சார்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, 
ஓகி புயலால் குமரி மீனவ மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளானார்கள். பல மீனவ மக்கள் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் சொந்த பந்தங்களை இழந்து தவித்து வருகின்றனர். காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தரக்கோரி மீனவர்கள் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குமரிக்கு சென்ற தமிழக முதல்வர் பழனிசாமி ஓகியால் உயிரிழந்த மீனவர்களுக்கு நிவாரணத் தொகையாக 20 லட்சம் ரூபாய், தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
 
இந்நிலையில் மீனவ அமைப்பினர் மற்றும் ஆலய நிர்வாகத்தினரின் சார்பாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 104 பேர் உயிரிழந்திருப்பதாகவும். 433 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. 433 பேர் காணாமல் போயிருப்பதால், பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.