திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 29 ஜூன் 2022 (17:21 IST)

பள்ளி வாகனங்களில் இந்த இரண்டு அவசியம் : தமிழக அரசு உத்தரவு

School Bus
பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமிரா மற்றும் சென்சார் ஆகிய இரண்டும் அவசியம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
கடந்த சில மாதங்களாக பள்ளி வாகனங்கள் அவ்வப்போது விபத்துக்குள்ளாகி வருகிறது என்பதும் எனவே பள்ளி வாகனங்களில் கூடுதல் வசதியை சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தன
 
இந்த நிலையில் பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா மற்றும் எச்சரிக்கை சென்சார் கருவி ஆகிய இரண்டும் அவசியம் பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
மேலும் பள்ளி வாகனங்களில் முன்பக்கமும் பின்பக்கமும்  தலா ஒரு காமிரா பொருத்த வேண்டும் என்றும் விபத்துக்களை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது
 
இதன் காரணமாக பள்ளி வாகனங்கள் விபத்துக்குள்ளாவது தவிர்க்கப்படும் என்றும் அனைத்து பள்ளி நிர்வாகமும் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது