வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 23 மார்ச் 2024 (16:36 IST)

XLS TMT கம்பிகள் மூலம் கட்டப்படும் கட்டிடங்கள் 150 ஆண்டுகள் வரை ஆயுள்

iSteel Company, iSteel Zinc
ஐஸ்டீல்  நிறுவனம், ஐஸ்டீல் ஜிங்க் அறிமுகம் செய்துள்ளது, அடுத்த தலைமுறை கேல்வனைஸ் செய்யப்பட்ட XLS TMT கம்பிகள், கட்டுமானங்களுக்கு மூன்று மடங்கு நீண்ட ஆயுளை வழங்குகிறது
 
துத்தநாகம் பூசப்பட்ட எஃகு, அதன் நீடித்த வலிமை மற்றும் அரிப்பு எதிர்ப்பு பண்புகளின் காரணமாக, வழக்கமான TMT கம்பிகளை விட மூன்று மடங்கு ஆயுட்காலம் கொண்டது.
 
இந்த நிறுவனம் அதன் வருவாயை ரூ. 650 கோடியில் இருந்து ரூ. 2000 கோடியாக உயர்த்த திட்டமிட்டு உள்ளது 
 
சென்னை, மார்ச் 22, 2024: தென்னிந்தியா முழுவதும் பிரீமியம் TMT கம்பிகள்-க்கு இணையான பிராண்டான ஐஸ்டீல்-ஐ சந்தைப்படுத்தும் விக்கி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பாரம்பரிய TMT கம்பிகளை விட மூன்று மடங்கு அதிக ஆயுளை வழங்கும் புதிய துத்தநாகம் (ZINC) பூசப்பட்ட TMT கம்பிகளான ஐஸ்டீல்ல் ஸிங்க்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
 
மேம்படுத்தப்பட்ட கேல்வனைசிங் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் ஐஸ்டீல்ல் ஸிங்க் 50 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கடலோரப் பகுதிகள், நீர்நிலைகள் மற்றும் தொழில்துறை மண்டலங்களுக்கு அருகிலுள்ள இடங்கள் போன்ற அரிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் நடைபெறும் கட்டுமானங்களுக்கு மிகவும் பொருத்தமானது. இந்த துத்தநாக பூச்சு அரிப்புக்கு எதிராக நம்பகமான பாதுகாப்பை வழங்குகிறது. இது கடலோர அல்லது ஈரப்பதமான சூழலுக்கு சரியானதாக உள்ளது. இது ஆய்வக சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
இது கடலோரப் பகுதிகளில் கட்டுமானத்திற்கு இன்றியமையாதது. மேலும் அடித்தளங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு ஐஸ்டீல்ல் ஸிங்க், கேல்வனைஸ் செய்யப்பட்ட XLS TMT கம்பிகள் ஒப்பிடமுடியாத ஆயுள் மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன. கேல்வனைஸ் செய்யப்பட்ட ஸ்டீல் காலத்துக்கேற்ற பரிசோதனையாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா, நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பாலம் மற்றும் புது டெல்லியில் உள்ள லோட்டஸ் கோயில் போன்ற நினைவுச்சின்னமான கட்டமைப்புகள் அதன் நீடித்த நம்பகத்தன்மைக்கு சான்றாக உள்ளன
 
இதன் அறிமுக விழாவில் எல்.புகழேந்தி, இந்தியா லீட் ஸிங்க் டெவலப்மென்ட் அசோசியேஷன் நிர்வாக இயக்குநர், புதுடெல்லி, டாக்டர் டி. வேணுகோபால், டாடா ஸ்டீல் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரி,  டாக்டர் ஏ.ஆர். சாந்தகுமார், சென்னை ஐஐடியின் முன்னாள் எமரிட்டஸ் பேராசிரியர் மற்றும் திரு. டி.வி.சுப்பிரமணியம், ஐஸ்டீல் நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டு தலைவர் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். 
 
அறிமுக விழாவில் பேசிய விக்கி இண்டஸ்ட்ரீஸ் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஜி.கௌதம் ரெட்டி, கூறுகையில், ‘’ஐஸ்டீல் ஸிங்க் கண்டுபிடிப்பு எங்கள் முக்கிய நோக்கத்துக்கு ஏற்ப உள்ளது. இது தனித்துவமான கட்டுமானப் பொருட்களை உருவாக்குவதற்கு முன்னோடியாக உள்ளது. இதனால், நாம் சென்றடையும் ஒவ்வொரு வீட்டையும் பாதுகாக்கிறது. இந்த புதிய தயாரிப்பு கட்டுமானப் பொருட்களின் தரத்தை மறுவரையறை செய்வதற்கும், நாட்டின் கட்டுமானம் நடைபெறும் இடப்பரப்பை மாற்றியமைப்பதற்குமான தன்மையை கொண்டுள்ளது. ஐஸ்டீல் ஸிங்க், கேல்வனைஸ் செய்யப்பட்ட XLS TMT கம்பிகள் மூலம் கட்டப்படும் கட்டிடங்கள் 150 ஆண்டுகள் வரை ஆயுளை எதிர்பார்க்கலாம். வழக்கமான TMT கம்பிகளை கொண்ட கட்டிடங்களின் ஆயுள்காலம் 50 ஆண்டுகள் ஆகும்.
 
தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது குறித்து அவர் கூறியதாவது: இந்தியாவில் ஆண்டுதோறும் 6,00,000 கோடி ரூபாய் மதிப்பிலான இழப்புகளுக்கு கட்டிட அரிப்பு வழிவகுக்கிறது. இது தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடானது அதன் கடலோரத் தன்மை மற்றும் கனரக தொழில்மயமாதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கட்டிட அரிப்புக்கு அதிக வாய்ப்புள்ளது; எனவே ஐஸ்டீல் ஸிங்க், , கேல்வனைஸ் செய்யப்பட்ட XLS TMT கம்பிகளை அறிமுகப்படுத்துகிறது. இந்தியாவிலும் உலகிலும் சமுதாயத்திற்கு கட்டிட அரிப்பு இழப்புகளைக் குறைப்பதில் இது எங்களின் பங்களிப்பாகும்.”
 
ஆரம்பத்தில் அதிகமாக முதலீடு செய்யவேண்டி இருந்தாலும், ஐஸ்டீல் ஸிங்க் கேல்வனைஸ் செய்யப்பட்ட XLS TMT கம்பிகள் குறைந்த பராமரிப்பு மற்றும் குறைவான மாற்றீடுகளுடன் நீண்ட காலத்துக்கு செலவு சேமிப்புகளை வழங்குகின்றன என்று திரு.ரெட்டி மேலும் கூறினார். மறுசுழற்சி செய்யக்கூடிய துத்தநாக பூச்சுகள் இடம்பெறும், இந்த கம்பிகள் குறைவான மாற்றீடுகள் மற்றும் குறைவான பழுதுகள் மூலம் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைக்க பங்களிக்கின்றன.
 
விக்கி இண்டஸ்ட்ரீஸ் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமான ஸ்டீல் கம்பிகளை தயாரித்து சந்தைப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. இது நிலைத்தன்மைக்கான வலுவான அர்ப்பணிப்புடன் ‘முதல் தரமான சிறந்த’ தயாரிப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. ஐஸ்டீல் ஸிங்க் அறிமுகம், புதுமை சார்ந்த வளர்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்களை நோக்கிய நிறுவனத்தின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. “ஐஸ்டீல் மூலம் 3,00,000 வீடுகள் கட்டப்பட்டிருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மேலும் இந்த எண்ணிக்கையை அதிவேகமாக அதிகரிப்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். எங்களின் வருவாயை ரூ.650 கோடியில் இருந்து ரூ. 2000 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.