1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 8 ஜனவரி 2018 (11:47 IST)

சார் பதிவாளர் அலுவலகங்களில் நுழைய இடைத்தரகர்களுக்கு தடை

சார் பதிவாளர் அலுவலகங்களில் நுழைய இடைத்தரகர்களுக்கு தடைவிதித்து உத்தரவு. இந்த உத்தரவு வரும் மார்ச் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
சார்பதிவாளர் அலுவலகங்களில் ஏற்படும் தில்லுமுல்லுகளைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவ்வப்போது சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பத்திரப்பதிவு அலுவலகங்களில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் வெளிப்படையாகவும், பொதுமக்கள் திருப்தி அடைய வேண்டும் என்பதற்காக  578 சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவின் போது ஆள்மாறாட்டத்தை தடுக்க வெப் கேமரா மூலம் புகைப்படம் எடுக்கும் திட்டம் அமலில் இருந்து வருகிறது.
 
இந்நிலையில் தற்பொழுது சார்பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள் மூலம் ஏற்படும் குளறுபிடிகளைத் தடுக்கும் விதமாக, அவர்களை அலுவலகத்தினுள் நுழைய தடை விதித்து பத்திரப்பதிவு துறை உத்தரவிட்டுள்ளது. சொத்து விற்பவர்கள், வாங்குபவர்கள் மற்றும் சாட்சியைத் தவிர வேறு யாரும் சார்பதிவாளர் அலுவலகங்களில் நுழையக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த செயல்பாடு வரும் மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது.