திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (18:25 IST)

ஹோட்டலை சூறையாடினாரா விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு உறவினர்?

ஹோட்டலை சூறையாடினாரா விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு உறவினர்?
திருச்சி அருகே ஓட்டலில் நடந்த தகராறு ஒன்றில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு உறவினர்கள் ஓட்டலை அடித்து சூறையாடியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஓட்டல் ஒன்றுக்கு வந்த அய்யாக்கண்ணு உறவினர் ஒருவர் ஆப்பாயில் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த ஆப்பாயில் வருவதற்கு தாமதம் ஆனதால் ஆத்திரமடைந்த அவர் கடை உரிமையாளர், ஹோட்டல் மாஸ்டர் ஆகியோர்களை தாக்கியதோடு ஓட்டலிலையும் சூறையாடியதாக தெரிகிறது 
 
இது குறித்து தகவல் அறிந்த தனியார் சேனல் நிறுவனங்கள் உடனடியாக அந்த ஓட்டலுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேட்டி எடுத்தனர். அப்போது அங்கு வந்த அய்யாக்கண்ணுவின் உறவினர்கள் செய்தியாளர்களையும் அடித்து காயப்படுத்தியதாக தெரிகிறது
 
இதனை அடுத்து செய்தியாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அய்யாக்கண்ணு உறவினர்களான ராஜபாண்டி கார்த்திகேயன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது