வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 8 ஜூன் 2020 (08:54 IST)

இன்று முதல் சுற்றுலா தலங்கள் திறக்க அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு

இன்று முதல் சுற்றுலா தலங்கள் திறக்க அனுமதி
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் இன்று திறக்க அனுமதிக்கப்படுவதாக மத்திய கலாச்சார துறை அமைச்சகம் அறிவிப்பு செய்துள்ளது.
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 18ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்ட நிலையில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் மட்டும் இன்று முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய கலாச்சார துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
 
தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், மாமல்லபுரம், தஞ்சாவூர், மதுரை, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களை ஜூன் 8ம் தேதி முதல் திறக்கலாம் என்ற ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது இதனை மத்திய கலாச்சார துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
 
மேலும் தொல்பொருள் ஆராய்ச்சிகள், தேசத்தின் கலாச்சாரத்தை பராமரிக்கும் சின்னங்கள் திறப்பு ஆகியவற்றுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலா பயணிகள் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்றி, மாஸ்க் அணிந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும், உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும், மத்திய அமைச்சர் பிரகலாத்சிங் படேல் தெரிவித்துள்ளார்.