திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 1 செப்டம்பர் 2021 (13:35 IST)

இதில் கை வைத்தால் ஆட்சியை இழந்துவிடுவீர்கள்? திமுக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

இதில் மட்டும் கை வைக்க வேண்டாம் என்றும், மீறி கை வைத்தால் ஆட்சியை இழந்து விடுவீர்கள் என திமுக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் விநாயகர் சிலைகளை பொது இடத்தில் நிறுவ தடை என்றும், விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தவும் அனுமதி இல்லை என அறிவித்து இருந்தது 
 
இந்த அறிவிப்புக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளியின்றி வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு மற்றும் தடை ஏன் என்ற கேள்வியை அவர்கள் எழுப்பி உள்ளனர்
 
இந்த நிலையில் இது குறித்து ஏற்கனவே தனது கண்டனத்தை பதிவு செய்த பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை கையிலெடுத்து திமுக அரசியல் செய்ய நினைத்தால் ஆட்சியை இழக்க நேரிடும் என எச்சரித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது