1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 22 ஜூலை 2023 (11:39 IST)

இதேபோன்ற உத்தரவை, தமிழகப் பள்ளிகளுக்கும் வழஙக் வேண்டும்: அண்ணாமலை கோரிக்கை..

தாய்மொழிக் கல்வி, உண்மையான படைப்பாற்றலை உருவாக்கும் என்றும், மத்திய அரசு இதற்கான உத்தரவை பிறப்பித்த நிலையில் இதே போன்ற உத்தரவை, தமிழகப்  பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வையில்  வகுக்கப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை 2020, குழந்தைகள் அவர்களின் தாய்மொழியில் கல்வி கற்பதையும் பள்ளிகளில் மாநில மொழிகளை மேம்படுத்துவதையும் வலியுறுத்துகிறது.
 
CBSE யின் சமீபத்திய சுற்றறிக்கை, நாடு முழுவதும் உள்ள CBSE பள்ளிகள், உயர்நிலை வரை இந்திய மாநில மொழிகளைப் பயிற்று மொழியாகப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
 
வெளிநாட்டு மொழிகளுக்குப் பதிலாக நமது தாய்மொழிக் கல்வியை ஊக்குவித்து, குழந்தைகளுக்கான கல்வியை முழுமையாக்கியதற்காக, மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர்  அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு, தமிழக பாஜக  சார்பாக பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 
 
தாய்மொழிக் கல்வி, உண்மையான படைப்பாற்றலை உருவாக்கும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இதேபோன்ற உத்தரவை, தமிழகப்  பள்ளிகளுக்கும் வழங்குமாறு இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக அரசை வலியுறுத்திக் கொள்கிறோம்.
 
Edited by Mahendran