திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 19 ஜூன் 2023 (08:16 IST)

விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் 12-ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் இன்று நடைபெறுமா?

பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வுகள் இன்று நடைபெற இருப்பதை அடுத்து 6 மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அந்த மாவட்டங்களில் துணைத் தேர்வுகள் நடைபெறுமா என்பது குறித்து தேர்வு துறை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 
 
தமிழகத்தில் கன மழை காரணமாக சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் இன்று தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு துணைத் தேர்வுகள் நடைபெற இருப்பதை அடுத்து இந்த தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள ஆறு மாவட்டங்களிலும் துணை தேர்வுகள் இன்று நடைபெறும் என்பதால் மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva