ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2024 (10:31 IST)

குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நண்பர்களுடன் மது விருந்து.. விபரீதத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு..!

குழந்தை பிறந்த சந்தோஷத்தில் நண்பர்களுடன் மது அருந்தச் சேர்ந்த 24 வயது இளைஞர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் கோவை அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கோவை பூலுவபட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் பலி குழந்தை பிறந்ததை கொண்டாட சென்ற போது நிகழ்ந்த சோகம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,.

கோவை ஆலந்துறை வெள்ளிமேடு பகுதியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்த 24 வயது பரணிதரன் என்ற இளைஞரின் மனைவிக்கு நேற்று முன்தினம் 2வது குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் மது அருந்தச் சென்றவர், தோட்டத்தில் பராமரிப்பின்றி கிடந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran