கமல்ஹாசனுக்காக தெருவில் இறங்கி ஆடிய அக்‌ஷராஹாசன் – வைரலாகும் வீடியோ!

Aksharahassan
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (12:52 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க அவரது மகள் அக்‌ஷராஹாசன் வீதியில் நடனமாடியது வைரலாகி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிய உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது.

இந்நிலையில் இன்று கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான அக்‌ஷராஹாசன் மற்றும் சுகாசினி ஆகியோர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது இசை வாத்தியத்திற்கு தெருவில் இறங்கி இருவரும் நடனமாடினார்கள்.

முன்னதாக தனது கட்சி சார்ந்த செயல்பாடுகளில் தனது வாரிசுகளை அனுமதிக்க போவதில்லை என்றும், வாரிசு அரசியல் இல்லாத கட்சியாக மய்யம் இருக்கும் என்றும் கமல்ஹாசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



இதில் மேலும் படிக்கவும் :