1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (17:25 IST)

அதிமுக- பாஜக இடையேயான மோதல் வழக்கு -வானதி சீனிவாசன் விடுதலை!

கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக இடையே ஏற்பட்ட மோதல் வழக்கில் வானதி சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர்  விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக வானதி சீனிசாவன் போட்டியிட்டார்.

 இவரை எதிர்த்து அதிமுக சார்பில் அம்மன் அர்ஜூன  போட்டியிட்டார்.  தேர்தல் பிரச்சாரம் முடிந்து வானதி சீனிவாசன் கடைவீதியில் உள்ள கோவிலுக்குச் சென்றபோஒது, அதிமுக – பாஜகவினருக்கு இடையே வாக்குவாதம் முற்றி க் சண்டை உருவானது.இதில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஆதிநாராயணன்  என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். பின்னர், பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர் மீது புகார் அளித்தார். இந்தப் புகாரை ஏற்று போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

 இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில், வானதி சீனிவாசன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.