ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (15:45 IST)

ஆட்சி, கட்சி, பதவி எதுவும் வேண்டாம்; சொத்து மட்டும் போதும்: ஜெ தீபாவின் டீலிங்?

ஜெயல்லைதவைன் போயஸ் கார்டன் இல்லம் குடும்ப சொத்து எனவும் இதனை அதிமுகவும் அரசும் உரிமை கொண்டாட முடியாது என ஜெ தீபா தெரிவித்துள்ளார். 
 
அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த ஜெயலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டு தீபா பேரவையை அதிமுகவுடன் இணைப்பதாக தெரிவித்தார். அதன்படி தீபா பேரவையை அதிமுகவுடன் இணைத்தும்விட்டார்.  
 
மேலும், தன்னுடைய பேரவையில் உறுப்பினர்களாக இருக்கும் எல்லோரையும் அதிமுகவில் இணைத்துள்ளார். அதிமுகவில் இணையும் உறிப்பினர்ளின் பெரிய லிஸ்ட் ஒன்றை அதிமுக  தலைமையிடம் கொடுக்க இருக்கிறார் தீபா. 
அதோடு, தனக்கு கட்சியில் எந்த பதவியும் தேவையில்லை. நான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு விசுவாசியாக இருந்தேன். இனியும் அப்படியே இருப்பேன் என தெரிவித்தார். 
 
ஆனால், அதன் பின்னர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் எங்களின் குடும்ப சொத்து. அது அதிமுக சொத்து கிடையாது. அரசின் சொத்து கிடையாது. அது எங்களுக்கு சொந்தமானது. 
போயஸ் இல்லத்திற்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. போயஸ் இல்லத்தை மீட்டு எடுப்பேன். ஜெயலிதாவின் சொத்துகளை சட்டப்படி மீட்டெடுப்பேன் என தெரிவித்துள்ளார். 
 
ஜெ தீபாவின் இந்த பேச்சு கடும் விமர்சனங்களை பெற்றுள்ளது. பதவி எதும் வேண்டாம் என அரசியல் நாடகம் போட்டது ஜெயலலிதாவின் சொத்துகளுக்காகவா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.