திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2017 (23:15 IST)

சென்னை ஐஐடியில் தீவிபத்து.

இந்தியாவின் முன்னணி ஐஐடி கல்வி நிறுவனங்களின் ஒன்றான சென்னை ஐஐடி சென்னையின் மையப்பகுதியான அடையாறு பகுதி அருகே உள்ளது. இந்த ஐஐடியில் இந்தியா முழுவதிலும் இருந்து வந்து மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.



 


இந்த நிலையில் ஐஐடி வளாகத்தில் உள்ள ஐ.சி.எஸ்.ஆர் அலுவலகக் கட்டடத்தில் சற்று நேரம் முன்பு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து காரணமாக அலுவலகத்தின் மேல்தளம் முழுவதும் தீப்பற்றி எரிந்து ஏராளமான பொருட்கள் நாசமானதாக தகவல் வெளியானது.

ஐஐடி வளாகத்தில் தீவிபத்து என்ற தகவல் கிடைத்தவுடன் உடனடியாக ஐந்து தீயணைப்பு வாகனங்கள் ஐஐடியை நோக்கி விரைந்தன. தீயணைப்பு துறையினர்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஐஐடி ஊழியர்களும் ஈடுபட்டனர்.

தற்போதைய நிலவரப்படி, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இந்த தீ விபத்தில் ஊழியர்கள் யாருக்கும் ஆபத்து இல்லை என்றும் பொருள் சேதம் குறித்து மதிப்பிடப்பட்டு வருவதாகவும் ஐ.ஐ.டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.