ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 15 மார்ச் 2022 (08:54 IST)

ரூ.58.23 கோடி சொத்துக்குவிப்பு: வேலுமணி மீது புதிய வழக்கு

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது ஏற்கனவே வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது ரூபாய் 58.23 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளதாக புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
 
 இன்று காலை முதல் வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 58.23 கோடி எஸ் பி வேலுமணி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது 
வருமானத்தைவிட 3928 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்துள்ளதாக எஸ் பி வேலுமணி குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது