ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 15 மே 2019 (12:27 IST)

கமலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

பிரச்சாரத்தில் சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்த கமலஹாசன்  “இந்தியாவின்  முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்று பேசியதை தொடர்ந்து அவருக்கெதிராக பல கண்டன குரல்கள் எழுந்துள்ளது. 
 
இந்நிலையில் பா.ஜ.க சார்பில் வழக்கறிஞர் அஸ்வின் உபாத்யோய டெல்லி உயர்நீதிமன்றத்தில் கமலுக்கு எதிராக அவதூறு வழக்கு பதிவு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் “தமிழ்நாட்டில் நடந்த பிரச்சினைக்கு அங்கே வழக்கு பதியாமல் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தது ஏன்?” என்று கேல்வி எழுப்பினர். மேலும் இவ்வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்கள்.
 
ஆனால், இந்த வழக்கை தவிர்த்து இந்து சேனா அமைப்பு தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நாளை மதியம் 2 மணியளவில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.