1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 23 மே 2020 (22:36 IST)

திமுக எம்.எல்.ஏக்கள் உட்பட 96 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து  கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை நிறைவு பெற்றது.

விசாரணைக்கு பின் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன ஆர்.எஸ்.பாரதி ஆஜர்படுத்தப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. மேலும், கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியை பார்க்க அனுமதிக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக எம்.எல்.ஏக்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஆர்.எஸ்.பாரதி இடைக்கால ஜாமீனில் விடுவிக்கபட்டார். அவர் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் உட்பட 96 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

இன்று ஆர்.எஸ்.பாரதியின் கைது நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏக்கள் உட்பட 96 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, தொற்று நோய் பரப்பும் செயலில் ஈடுபடுதல், சட்டவிரோதமாக கூடுதல் உட்பட 3 பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.