ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (10:20 IST)

இன்று ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்த நாள்.. ஈபிஎஸ் உடன் சந்திப்பா?

ops dharmayudham
இன்று ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்த நாள்.. ஈபிஎஸ் உடன் சந்திப்பா?
ஓபிஎஸ் அவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு இதே தினத்தில்தான் தர்மயுத்தம் செய்தார் என்பதும் அதன் பின்னர் பல அரசியல் திருப்புங்கள் ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்து 6 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி உடன் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்த ஈரோடு கிழக்கு வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவு என்ற முடிவை ஓபிஎஸ் எடுத்து உள்ள நிலையில் இன்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் இருவரும் இணைந்து பிரச்சாரம் செல்லவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இதன் மூலம் அதிமுகவின் இரு அணிகள் மீண்டும் ஒரே அணியாக செயல்பட வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்த அதே நாளில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் சந்திப்பு நடைபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva