ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (11:40 IST)

சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகை திருட்டு: பெண் உள்பட இருவர் கைது!

arrested
சொந்த வீட்டிலேயே 550 பவுன் நகை திருடிய பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பூந்தமல்லி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருவள்ளூர் அருகே உள்ள பூந்தமல்லியில் உள்ள ஒரு வீட்டில் 550 சவரன் நகை திருடு போனது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர்
 
இந்த விசாரணையில் நகை திருடு போன வீட்டில் சேர்ந்த ஒருவரே இந்த நகையை திருடியதும், அவருக்கு உதவியாக ஒரு பெண் இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இதனை அடுத்து சேகர் என்றஅந்த நபரை கைது செய்த காவல்துறையினர் அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணையும் கைது செய்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகையை திருடியது ஒப்புக்கொண்டதாக தெரிகிறது
 
இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பூந்தமல்லி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது