வெள்ளி, 28 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 23 ஜூலை 2016 (15:31 IST)

சென்னை தனியார் ஹோட்டலில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.


 
 
பெரம்பூரில் தனியார் ஹோட்டலில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது அதில் விஷவாயு வெளியானதால் சம்பவ இடத்திலேயே ராமகிருஷ்ணன், வினய், சதீஷ் ஆகிய 3 தொழிலாளர்கள் இறந்தனர்.
 
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு வீரர்களை கொண்டு பலியானவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வியாசர்பாடி, செம்பியம், எஸ்பிளனேடு பகுதி தீயணைப்பு வீரர்கள் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.