கணவரின் பிணத்துடன் 3 நாள் வசித்த மனைவி


Ashok| Last Updated: வெள்ளி, 18 டிசம்பர் 2015 (18:15 IST)
மதுரையில் கணவர் உயிரிழந்தது தெரியாமல் அவருடைய பிணத்துடன் மனநிலை பாதிக்கப்பட்ட மனைவி மூன்று நாட்களாக அவர்களுடைய வீட்டில் ஒரே அரையில் வாழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
மதுரை சோலை அழகுபுரம் ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் என்பவருக்கு குடிப்பழக்கம் உள்ளவர். இவரது மனைவி நாகேஸ்வரி மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர்களது மகன் மணிகண்டன் (35) தனது மனைவியுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இவர் மதுரையில் பிளக்ஸ் போர்டு கட்டும் தொழில் செய்து வருகிறார்
 
இந்நிலையில், தன்னுடைய வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்த மணிகண்டன், நேற்று மாலை ஊர் திரும்பிய போது, தன்னுடைய தந்தை வீட்டிற்கு அருகே இருப்பவர்கள் போன் செய்துள்ளனர். உன்னுடைய தந்தை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது உடனடியா வீட்டிற்கு வரும்படி அவர்கள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, பெற்றோரைப் பார்க்க விரைந்து வந்த மணிகண்டன், கட்டிலில் தன்னுடைய தந்தை உடல் அழுகிய நிலையில் கிடந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். அப்பொழுது தனது கணவர் இறந்தது கூட தெரியாமல் அருகிலேயே மணைவி நாகேஸ்வரியும் இருந்துள்ளார். இது குறித்து வீட்டின் அருகே இருந்தவர்கள், ஜெய்ஹிந்த்புரம் போலீஸக்கு தகவல் அளித்தனர்.  

பின்னர், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சடலத்தை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்னரே நடராஜன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
 
இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீஸார் விசாரணை நடத்தியதில், "மணிகண்டனின் தாய் நாகேஸ்வரி மனநிலை பாதிக்கப்பட்டவர். கடந்த 3 நாட்களுக்கு முன்பே இவரது தந்தை நடராஜன் இறந்துவிட்டார். அதுபற்றி யாரிடமும் தெரிவிக்காமல் இவருடைய தாய் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் தன்னுடைய கணவன் இறந்தது கூட தெரியாமல் பிணத்துடன் மணைவி நாகேஸ்வரி இருந்துள்ளதாக தெரிகிறது, இதுகுறித்து மேலும் விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :