1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (10:59 IST)

சென்னையில் இருந்து கடல் மார்க்கமாக 1000கிமீ பயணம் செய்த வெளிமாநிலத்தவர்கள்!

கடல் மார்க்கமாக 1000கிமீ பயணம் செய்த வெளிமாநிலத்தவர்கள்!
பேருந்து, ரயில், விமானம் என அனைத்து போக்குவரத்துகளும் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதால் வெளிமாநில தொழிலாளர்கள் சென்னையில் இருந்து கடல்மார்க்கமாக 1000கிமீ பயணம் செய்த செய்தி தற்போது வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
சென்னையில் பணியாற்றி வந்த ஒடிஷா, ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலையில் 27 பேர் சேர்ந்து கடல் மார்க்கமாக சொந்த ஊர் செல்ல திட்டமிட்டனர். இதற்காக சொந்தமாக படகை ஒரு லட்சத்து 73 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி ஒரு படகோட்டியை துணைக்கு அழைத்து கொண்டு ஆந்திராவுக்கும் ஒடிஷாவுக்கும் சென்றுள்ளனர்.
 
கடலோர காவல்படை 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கும் நிலையில், இவர்கள் எப்படி அவர்களிடம் சிக்காமல் பயணம் செய்தனர் என்ற ஆச்சரியம் ஒருபுறமும், கடல்மார்க்கமாக சென்ற இந்த செய்தி இத்தனை நாட்கள் யாருக்கும் தெரியாமல் இருந்தது எப்படி என்ற அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது
 
இந்த படகை ஓட்டிச் சென்ற மீனவர் ஒருவர் இந்த தகவலை தனது உறவினர் ஒருவரிடம் சொன்ன பின்னரே இந்த தகவல் போலீசார், மீடியா உள்பட அனைவருக்கும் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது