1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 25 அக்டோபர் 2018 (09:34 IST)

18 எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பு: இன்று ஆஜராகும் வழக்கறிஞர்கள் யார் யார்?

தமிழக அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒரு மணி நேரத்தில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், டிடிவி தினகரனும் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்.

அதேபோல் தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் மோகன் பராசரன், பி.எஸ்.ராஅமன் ஆஜராகின்றனர்

மேலும் சபாநாயகர் தரப்பில் ஆரியமா சுந்தரம் அவர்களும், அரசு தலைமை கொறடா தரப்பில் முகுல் ரோத்தகி அவர்களும் ஆஜராகின்றனர்.

இன்று தீர்ப்பு வெளிவரவுள்ளதை அடுத்து நீதிமன்றத்தின் முன் ஊடகங்கள் குவிந்துள்ளது. மேலும் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.