திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 14 பிப்ரவரி 2024 (15:43 IST)

34 மாதங்களில் 1,448 சிறுமிகளுக்குப் பிரசவம்.. நெல்லையில் என்ன தான் நடக்குது?

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 34 மாவட்டம் மாதங்களில் 1448 சிறுமிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மதுரை சேர்ந்த சுகாதார ஆர்வலர் மேரி என்பவர் தகவல் அறியும் உரிமை மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுமிகளுக்கு நடைபெற்ற பிரசவம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார் 
 
இதற்கு பதில் அளித்துள்ள திருநெல்வேலி சுகாதார பணிகள் துணை இயக்குனர் கடந்த 2021 ஜனவரி முதல் 2023 அக்டோபர் வரை 34 மாதங்களில் 18 வயதுக்கு உட்பட்ட 1448 சிறுமிகள் குழந்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
குழந்தை திருமண எதிர்ப்பு குறித்து போதிய விழிப்புணர்வு இந்த மாவட்டத்தில் இல்லை என்றும் குழந்தை திருமணத்தை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் கூறியுள்ளனர் 
 
 
நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சிறுமிகளுக்கு திருமணம் செய்து வருவது திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் கூறியுள்ளனர்.
 
Edited by Mahendran