அ‌க்டோப‌ர் 2 முத‌ல் நாடு முழுவது‌ம் புகை‌பிடி‌‌க்க‌த் தடை: அமை‌ச்ச‌ர் அ‌ன்பும‌ணி!

Webdunia| Last Modified ஞாயிறு, 1 ஜூன் 2008 (11:55 IST)
நமதநாடமுழுவது‌மவரு‌கிஅ‌க்டோப‌ர் 2 ஆ‌மதே‌தி முத‌லபொதஇட‌ங்க‌ளி‌லபுகை‌பிடி‌க்க‌ததடை ‌வி‌தி‌க்க‌ப்படு‌மஎ‌ன்றம‌த்‌திசுகாதாஅமை‌ச்ச‌ரமரு‌த்துவ‌ரஅ‌ன்பும‌ணி ராமதா‌ஸஅ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடந்த, 'புகையிலை தீமையிலிருந்து இளைஞர்களை காப்போம், புகையிலை வணிக வலையை அறுத்தெறிவோம்' என்ற கருத்தை மையமாகக் கொண்ட உலக புகையிலை எதிர்ப்பு தின விழாவில் பே‌சிய அமை‌ச்ச‌ர் அ‌ன்பும‌ணி, "அக்டோபர் மாதம் 2ஆ‌ம் தேதி முதல் இந்தியாவில் பொது இடத்தில் புகை பிடிப்பது தடை செய்யப்படும். விடுதி, வரவேற்பு அறை, ரயில் நிலையங்கள், தனியார், பொதுத்துறை நிறுவனங்கள் உள்பட எங்கும் புகை பிடிக்கக்கூடாது.
அப்படி புகைபிடிக்க வேண்டும் என்றால் தெருவிற்கு சென்றோ, வீட்டிற்கு சென்றோதான் புகைபிடிக்க வேண்டும். அக்டோபர் 2ஆ‌ம் தேதி முதல் யாராவது எங்காவது புகைபிடித்தால் அவரை அந்த இடத்தில் இரு‌ந்து வெளியேற்றுவது உங்கள் கடமை ஆகும்" எ‌‌‌ன்றா‌ர்.

"பொது இடங்களில் புகைபிடிக்கக் கூடாது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ புகையிலைகளை விளம்பரம் செய்யக்கூடாது. புகையிலை பொருட்களை கல்லூரிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவில்தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற சட்டம் கட‌ந்த 3 ஆண்டுகளாக காகிதத்தில் இருக்கிறது.
பொது இடத்தில் புகைபிடிக்கக் கூடாது என்ற சட்டத்தை எந்த மாநில அரசும் அமல்படுத்துவது போல‌த் தெரியவில்லை. எனவே சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. புகையிலை கட்டுப்பாடு ஆணையம் தயார் செய்து வரும் பு‌திய ச‌ட்ட‌ம் நாடாளுமன்றத்தில் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட‌த் தயாராக உள்ளது.

ப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரி ஆசிரியர்க‌ளி‌ல் 22 ‌விழு‌க்கா‌ட்டின‌ர் புகைபிடிக்கி‌ன்றன‌ர் என்று ஆய்வு கூறுகிறது. எனவே பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது" எ‌ன்றா‌ர் அமை‌ச்ச‌ர் அ‌ன்பும‌ணி.


இதில் மேலும் படிக்கவும் :