வீட்டுக்குள் வந்த காதலனைத் தாக்கிய கும்பல் – கணவன் என பொய் சொல்லி மாட்டிய பெண் !

Last Modified புதன், 18 செப்டம்பர் 2019 (08:41 IST)
ஏர்வாடி பகுதியில் உள்ள பெண் ஒருவரின் வீட்டுக்கு வந்த கள்ளக்காதலனைத் தாக்கிய கும்பலைப் போலிஸ் கைது செய்துள்ளது,

ஏர்வாடியில் உள்ள LNS புரம் எனும் சேர்ந்த மணி எனும் நபர்  அதேப் பகுதியைச் சேர்ந்த ரோஷன் பானு என்ற பெண்ணோடு தொடர்பில் இருந்துள்ளார். ரோஷன் பானுவின் கணவர் வெளிநாட்டில் இருப்பதால் மணி அடிக்கடி ரோஷன் பானுவின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இதனைக் கவனித்த அப்பகுதி இளைஞர்கள் மணி வழக்கம்போல வீட்டுக்கு வரும்போது உள்ளே சென்று அவரைத் தாக்கியுள்ளனர்.

இதையடுத்து ரோஷன் பானு போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று தாக்குதல் நடத்தியவர்கள் மேல் புகார் கொடுத்துள்ளனர். அப்போது மணியைத் தனது கணவர் என சொல்லியுள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து விசாரணை நடத்த ரோஷன் பானுவின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் மணி அவரது கள்ளக்காதலன் எனவும் கண்டுபிடித்துள்ளனர். இந்த செய்தியால் போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :