சென்னை : வன்முறையை கட்டவிழ்த்து விடுவது கருணாநிதிக்கு கைவந்த கலை என்று கூறியுள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, ஆகவே தமிழ் நாட்டில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற ஏதுவாக தி.மு.க அரசின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து தேர்தல் நன்னடத்தை விதிகள் மீறப்படும் பட்சத்தில் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டியது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலையாய கடமை என்று கூறியுள்ளார்.