சென்னை : இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வரும் 10ஆம் தேதி நடக்க இருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டதால் வரும் 9ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.