முதலமைச்சர் கருணாநிதிக்கு நாளை அறுவை சிகிச்சை
முதுகுவலி குறையாத காரணத்தினால் முதலமைச்சர் கருணாநிதிக்கு நாளை (11ஆம் தேதி) அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்று மருத்துவர்கள் குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்றிரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் கருணாநிதி முதுகில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக 15 நாட்களுக்கு மேலாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வலி குறையாத காரணத்தினால் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்கப்பட்டு, அவரது தண்டுவடத்தில் ஏற்பட்டுள்ள வலியை சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை செய்வதென்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்துள்ளார்கள்.
இதுகுறித்து 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து வந்த மருத்துவர் ஏ.ஜெய்ஸ்வாலும், மற்ற மருத்துவர்களும் கலந்து பேசி அறுவை சிகிச்சை செய்வதென்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். இந்த அறுவை சிகிச்சை 11.2.2009 புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது. முதலமைச்சர் கருணாநிதியின் நலனை கவனிக்க பின்வரும் மருத்துவர்களைக் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.
அந்த குழுவிற்கு எலும்பு சிகிச்சை நிபுணர் மருத்துவர் எஸ்.எஸ்.கே.மார்த்தாண்டம் தலைமை வகிப்பார். அந்த குழுவில் மருத்துவர்கள் ய்ஸ்வால், மயில்வாகனன், கார்த்திக் கைலாஷ், எஸ்.தணிகாசலம், ஐ.எஸ்.நாயுடு, மகேஷ் வகாமுடி, பாஸ்கர், பி.எஸ்.சண்முகம், ராஜ் பி.சிங், ஏ.வி.சீனிவாசன், சவுந்தரராசன், கே.ஆர்.பழனிசாமி, பி.கோபால் (முதலமைச்சர் கருணாநிதியின் தனி மருத்துவர்) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு முதலமைச்சர் கருணாநிதி விரைவில் நலம் பெற்றிடும் வகையில் பார்வையாளர்கள் கண்டிப்பாக ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|