சென்னை : இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்துள்ள பொது வேலை நிறுத்தத்தில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் பங்கேற்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.